திருவல்லிக்கேணி:கழக அம்மா பேரவை செயலாளர் ஆர்.பி.உதயகுமார் அவர்களின் அறிவுறுத்தலின் பேரிலும், தென் சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ஸ்டிக்கர் ரவிக்குமார் அவர்களின் ஏற்பாட்டிலும், அஇஅதிமுக கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களின் சாதனைகள் அடங்கிய சாதனைகள் குறித்த துண்டு பிரச்சுரம் சேப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட எல்லீஸ் சாலை பகுதியில் தென் சென்னை வடக்கு கிழக்கு மாவட்டச்செயலாளர் ஆதி ராஜாராம் அவர்களின் தலைமையில் துவக்கி வைக்கப்பட்டது.

மேலும் அதிமுக அரசின் சாதனைகளை வெளிக்
கொணரும் விதமாக ஜாம்பஜார் மார்க்கெட், குப்புமுத்து தெரு, அபிபுல்லா தெரு, திருவல்லிக்கேணி பிரதான சாலை, பிள்ளையார் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்கள் மற்றும் வணிகர்களிடையே துண்டு பிரச்சுரம் விநியோகிக்கப்பட்டது.



மேலும் இதில் எம். ஜி. ஆர் மன்ற
தென் சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் செல்வக்குமார்,
ஆனந்தன், மணிகண்டன், ஜெயச்சந்திரன், ஜெயந்தி ரவிச்சந்திரன், சாரங்கன், புதுப்பேட்டை குமார், முருகன், சங்கர், ராமதாஸ், சதீஸ், ரஞ்சன், பக்கிரிசாமி, சீனிவாசன், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

