சென்னை:திரைபட நடிகரும் , மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் அவர்களது 66வது பிறந்தநாள் பல இடங்களில் ரசிகர்களாலும், தொண்டர்களாலும்,கோலகலமாக சிறப்பாக கொண்டாடப்பட்டது,

மேலும் ரசிகர்கள் பலர் நற்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பல புதுமைகளை திரைபடங்களில் புகுத்திய கமல்ஹாசன் அரசியலிலும் புதுமை படைத்து வருகிறார் .

சென்னையை சேர்ந்த SPT சர்வதேச சாதனையாளர்கள் பயிற்சி அகடாமி இணையதள வழியே Zoom ஆப் மூலமாக 66 விருந்தினர்கள் ,66 தலைப்புகள் என 6 மணிநேரத்தை கடந்து நேரலை வாழ்த்துப்பதிவை நிகழ்த்தி கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

இந்த நிகழ்வை பிரபல மனித உரிமை ஆர்வலரும், சோஷியல் புரோடக்ஷன் தலைவருமான ஜோசப் இளந்தென்றல் அவர்கள் இந்த திட்டத்தை உருவாக்கி தொகுத்தும் வழங்கினார்.

இந்த நிகழ்வில் 6 வயது முதல் பெரியவர்கள் வரை பங்கேற்றனர். மலேசியா ராக்ஸ்டார் மீடியா குழுவினர், பிரான்ஸ் கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தினர், அரபு நாடுகள், இந்தியா உள்பட அயல்தேசத்திலிருந்து பலர் இந்த நிகழ்வில் குடும்ப குடும்பமாக பங்கேற்றனர்…

இது போன்ற நிகழ்வு இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது..