ஹெல்ப் ஏஜ் இந்தியாவின் புராஜெக்ட் சுரக்‌ஷித் திட்டம் அறிவிப்பு
50 ஆயிரம் மூத்த குடிமக்களுக்கு டிஜிட்டல் பாதுகாப்பு பயிற்சி!

இணைய பாதுகாப்பு தினத்தையொட்டி டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் போது இணையத்தில் பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பது குறித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு சிறப்பு பயிற்சி பட்டறைகள் மூலம் இன்று பயிற்சி அளிக்கப்படுகிறது.

சென்னை : ஹெல்ப்ஏஜ் இந்தியா நிறுவனம் தனது தேசிய அளவிலான “புராஜெக்ட் சுரக்‌ஷித்” திட்டத்தை கூகுள்.ஓஆர்ஜி நிறுவனத்தின் மாபெரும் ஆதரவுடன் அறிமுகம் செய்கிறது. இதன் மூலம் ஆன் லைன் மோசடி, திருட்டு உள்ளிட்டவற்றிலிருந்து மூத்த குடிமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் பயிற்சி அளிப்பதை நோக்கமாக கொண்டு தொடங்கியுள்ளது. பிப்ரவரி 7-ம் தேதி இணைய பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்படுவதை அடையாளப்படுத்தும் விதமாக, ஹெல்ப்ஏஜ் இந்தியா நிறுவனம் நாடு முழுவதும் 16 மாநிலங்களில் ஒரே நேரத்தில் 1000-க்கும் அதிகமான மூத்த குடிமக்களுக்கு டிஜிட்டல் பாதுகாப்பு பயிற்சி பட்டறைகளை தொடங்கியுள்ளது.

நாட்டிலேயே முதன்முறையாக நடத்தப்படும் இது போன்ற பயிற்சி பட்டறைகள் வாயிலாக மூத்த குடிமக்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்பின் மூலம் டிஜிட்டல் பாதுகாப்பு குறித்த பயிற்சிகளை வழங்குகிறது. இணையத்தில் பாதுகாப்பாக செயல்படுவது, அவற்றில் தங்களது திறன்களை மேம்படுத்திக் கொள்வது, ஆன்லைன் மூலமாக கிடைக்கக் கூடிய டிஜிட்டல் வசதிகளை பயன்படுத்தி அதன் பலன்களை பெறுவது உள்ளிட்ட அத்தியாவசியமான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.  இதன் மூலம் இணைய மோசடிகளால் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்படக்க கூடிய சமூகத் தொகுதியான இவர்களிடம் மிகப் பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை ஹெல்ப்ஏஜ் இந்தியா நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. பொதுவாக ஆன்லைனில் காணப்படும் மோசடிகளை கண்டறிந்து அவற்றை தீர்ப்பதற்கு மூத்த குடிமக்கள் தயாராகும்படி இதன் வாயிலாக கேட்டுக் கொள்ளப்படுவார்கள். உறுதியான கடவுச்சொல்லை உருவாக்குதல், இணையம் வாயிலாக ஆன்லைனில் வங்கி சேவைகளை கையாளும் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள், ஆன்லைன் வாயிலாக கட்டணம் உள்ளிட்ட பில்களை பாதுகாப்பாக செலுத்துதல், தங்களது கருவிகளை பாதுகாப்பாக கையாளுதல், ஆன்லைன் மோசடிகளை கண்டறிதல், வாட்ஸ்ஆப் செயலியை பாதுகாப்பாக பயன்படுத்துல், வாடகை வாகனங்களை முன்பதிவு செய்யும் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட 7 மாதிரிகளை உள்ளடக்கி குடிமக்களின் தேவைக்கு ஏற்ப பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

நாள்தோறும் மிக வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் சேவைகளான ஆன்லைனில் பணம் செலுத்துதல், தினசரி பொருட்களை கொள்முதல் செய்தல், வங்கி சேவைகள், ஷாப்பிங் உள்ளிட்டவற்றில் மிகவும் அதிகமாக பாதிக்கப்படும் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. டிஜிட்டல் தொழில் நுட்பத்தை மிகவும் தாமதமாக ஏற்றுக் கொண்டவர்களான மூத்த குடிமக்களே ஆன்லைன் மோசடியாளர்களின் எளிய இலக்காக ஆகியுள்ளனர்.
இது குறித்து மூத்த குடிமக்கள் சங்கத்தின் உறுப்பினரான 61 வயதான திருமதி அருணா குப்தா கூறுகையில், “இது போன்ற பயிற்சிகள் மிகவும் அத்தியாவசியமானவை; ஆன்லைன் மோசடிகள் அதிகரித்துவரும் இன்றைய கால கட்டத்தில் இது போன்ற பயிற்சிகள் மூத்த குடிமக்களுக்கு அவசியம் தேவைப்படுகின்றன. குறிப்பாக என்னை பொறுத்த வரையில், எங்கே எனது சேமிப்பு திருடப்பட்டு விடுமோ என ஒவவொரு முறையும் எனது செல்போனில் எந்தவொரு லிங்கையும் தொடுவதற்கே மிகவும் அச்சத்துடன் உள்ளேன்” என்கிறார்.

இது குறித்து ஹெல்ப்ஏஜ் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி ரோகித் பிரசாத் [Rohit Prasad, CEO, HelpAge India.] கூறுகையில், “மூத்த குடிமக்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியத்தை பெருந்தொற்று காலக்கட்டம் உருவாக்கியது. இன்றைய காலக்கட்டத்தில் டிஜிட்டலை தவிர்த்து விட்டு வாழ்வது சாத்தியமல்ல, நமது அத்தியாவசிய சுகாதார, பாதுகாப்பு சேவைகள் அனைத்தும் ஸ்மார்ட்போன்களுடன் இணைக்கப்பட்டுவிட்டன. மேலும் பலசரக்கு, ஆன்லைனில் கட்டணங்களை செலுத்துதல், இணையதள வங்கி சேவை என இது போல் ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ள நமது அன்றாட தேவைகளும் பயன்பாடுகளும் எண்ணிலடங்காதவை.

பெருந்தொற்றின் போது ஏற்பட்ட முழு அடைப்பு போன்றவை காரணமாக மூத்த குடிமக்கள் தீவிரமான தனிமையையும், தொடர்பின்மையையும் கடக்க வேண்டியதாயிற்று. எனவே அவர்கள் செயலூக்கத்தூடனும், மன ஆரோக்கியத்துடனும் இருப்பதற்கு சமூக தொடர்புகள் மிகவும் அவசியம். இதற்கேற்ப தங்களை எவ்வாறு தகவமைத்துக் கொள்வது என்பதை இளம் தலைமுறையினர் கண்டுகொண்ட அதே வேளையில், இந்த திடீர் மாற்றத்தை மூத்த குடிமக்கள் எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினர். இது அவர்களை எளிதில் ஆன்லைன் மோசடிகளுக்கும் ஏமாற்றுக்கும் எளிதில் இலக்காக்கியது. புராஜெக்ட் சுரக்‌ஷித் திட்டத்தின் வாயிலாக, எந்தவொரு மூத்த குடிமக்களும் பாதிக்கப்பட்டவர்களாகவும் விடுபட்டவர்களாகவும் இருந்திடாத வகையில், டிஜிட்டல்  இடைவெளிகளை குறைத்து, மூத்த குடிமக்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்க முடியும் என ஹெல்ப்ஏஜ் இந்தியா நம்புகிறது.

Lகூகுள்.ஒஆர்ஜி நிறுவனத்தின் ஹெட் ஆஃப் அட்வோகசி மற்றும் ஏஷியா பசிபிக் ஹெட் அன்னி லெவின் [Annie Lewin, Head of Advocacy and Asia Pacific, Google.org] கூறுகையில்,  “ஒவ்வொரு நாளும், லட்சக்கணக்கான இந்தியர்கள் தங்களது வசதி வாய்ப்புகளுக்காக இணையத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த அனுபவம் எல்லோருக்கும் அவர்களது தேவைகளை அறிந்து வாய்ப்புகளைக் கொடுப்பதாக இருந்தாலும்,  அவர்களது குடும்பங்களில் உள்ள முதியவர்களுக்கு இது பெரும் கவலையளிப்பதாகவே இருக்கிறது. மூத்த குடிமக்கள் ஆன்லைன் பயன்படுத்தும்போது மிக எளிதில் ஆபத்தினால் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு குடும்பத்தில் உள்ள மற்றவர்களைப் போல தொழில்நுட்ப வசதிகள் இல்லை. என்பதே அதற்கு காரணம். புராஜெக்ட் சுரக்ஷித் முன்முயற்சியின் மூலம் ஹெல்ப்ஏஜ் இந்தியாவை ஆதரிப்பதில் Google.org பெருமை கொள்கிறது, மேலும் நாடு முழுவதும் உள்ள மூத்த குடிமக்களுக்கு மிக அவசியமான டிஜிட்டல் பாதுகாப்பு பயிற்சி மற்றும் விழிப்புணர்வைக் கொண்டுவரும் முயற்சியாக புராஜெக்ட் சுரக்‌ஷித் அமைந்திருக்கிறது. டிஜிட்டல் பாதுகாப்புப் பயிற்சி பட்டறைகள் இந்த திட்டத்தின் முதல் படியாகும், மூத்த குடிமக்கள் பெருமளவில் பங்கேற்பதை அதிகரிக்கவும், இணைய பயன்பாட்டில் மூத்த குடிமக்களையும் பாதுகாப்புடன் ஈடுபட வைப்பதையும், ஆன்லைனை பயன்படுத்தும் போது அவர்களுக்கு நம்பிக்கை அளிப்ப்பதையும் நோக்கமாக கொண்டு இம்முயற்சியை முன்னெடுத்து இருக்கிறோம்’’ என்றார்.
இது குறித்து ஹெல்ப்ஏஜ் இந்தியா நிறுவனத்தின் கம்யூனிகேஷன்ஸ் & மிஷன் மற்றும் டிஜிட்டல் லிட்ரஸி ப்ரோக்ராம் ஆகிய பிரிவுகளின் தலைவர் சோனாலி ஷர்மா [(Sonali Sharma, Head – Communications & Mission Head – Digital Literacy Program, HelpAge India)] கூறுகையில், “நாடு முழுவதும் உள்ள மூத்த குடிமக்கள் சங்கங்களுடன் இணைந்து நாங்கள் பணியாற்றுகிறோம். மேலும் மூத்த குடிமக்கள் மேற்கொள்ள வேண்டிய டிஜிட்டல் பாதுகாப்பு அம்சங்கள் அதிகரித்துள்ளதையும் நாங்கள் உணர்ந்துள்ளோம். ஆன்லைன் மோசடிகளில் சிக்கிக் கொள்வதன் மூலம், மூத்த குடிமக்கள் தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த சேமிப்பை இழக்க நேரிடுகிறது. இது போன்ற மோசடிகளை அடையாளம் கண்டு அவற்றுக்கு தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அறிவை அவர்களுக்கு நாம் வழங்க வேண்டும். இதன் மூலம் அவர்களின் பணம் பாதுகாக்கப்படுவதுடன், அவர்கள் டிஜிட்டல் உலகை மிகவும் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் கையாள முடியும். இது போன்ற பல்வேறு வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்கலாம்” என்றார்.

“இணைய பாதுகாப்பு தின” பயிற்சி பட்டறை நடைபெறும் இடங்கள் : டெல்லி, பஞ்சாப், கேரளா, தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரபிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, புதுச்சேரி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹிமாச்சல பிரதேசம், சட்டீஸ்கர், கோவா, உத்தரகண்ட், உத்தர பிரதேசம்.

சென்னை, அம்பத்தூர் ஓய்வுபெற்ற அலுவலக சங்கம் மற்றும் ஹெல்ப்ஏஜ் இந்தியா இணைந்து ‘டிஜிட்டல் பாதுகாப்பு பயிற்சி, நிகழ்த்தினார்கள். இப்பயிற்சியில் முப்பதிற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் பங்கேற்றனர். இற்பயிற்சியின் மூலம் ஆன்லைன் மோசடி மற்றும் வங்கி கணக்குகளை கையாளுவது மற்றும் வாட்ஸ்அப் பயன்பாடுகள் கூகுள் வரைபடம் OLA பயன்பாடு மற்றும் மின்னஞ்சல் மூலமாக எவ்வாறு சமுதாய பிரச்சனைகளை, தெரிவிப்பது என்று விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியில் திருமதி. லட்சுமி (72) அவர்கள் கீழ்க்கண்ட கருத்தினை கூறினார். “இப்பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இதன்மூலம் புதிதாக பல செயலிகளின் உபயோக விழிப்புணர்வு கிடைத்தது என்றார் மேலும் இனி நடக்க இருக்கும் அனைத்து பயிற்ச்சிக்கும் பங்கேற்ப்போம் என்று மகிழ்ச்சியுடன் ஹெல்ப்ஏஜ் இந்தியாவிற்க்கு நன்றி தெரிவித்தார்”.

ஹெல்ப்ஏஜ் இந்தியா குறித்து :
ஹெல்ப்ஏஜ் நிறுவனம், இந்தியாவில் உள்ள மூத்த குடிமக்களுக்காக கடந்த 45 ஆண்டுகளாக சேவையாற்றி வரும் முன்னணி தொண்டு நிறுவனமாகும். நாடு முழுவதும் முத்த குடிமக்களுக்கான சுகாதாரம், பராமரிப்பு, வாழ்வாதாரம் மற்றும் அவர்களின் உரிமைகளுக்காக வலுவாக செயல்பட்டு வருகிறது. மூத்த குடிமக்கள் தொடர்பான கொள்கைகளை அரசுக்கு தகவல்களையும் ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது. பேரிடர் காலங்களில் நிவாரணத்தில் மட்டுமின்றி, மறுவாழ்வு அளிப்பதிலும் இது கவனம் செலுத்தி வருகிறது. ஆகவே இதன் மூலம் நீண்ட காலம் மூத்த குடிமக்கள் தங்களை தாங்களே நிலைநிறுத்திக் கொள்வதற்கான ஆற்றலை அளிக்கிறது. கோவிட் பெருந்தொற்று காலகட்டம் தொடங்கியதும் களத்தில் இறங்கிய முன்னணி நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும். மேலும் பாதிக்கப்பட்ட மூத்த குடிமக்களை உடனடியாக சென்றடைந்தது பெருந்தொற்று முழு அடைப்பு கால கட்டத்தில் தொடர்பின்றி தனித்து விடப்பட்டவர்களை சென்றடைந்து முழுமையாக பணியாற்றியது. கோவிட் பெருந்தொற்று கால கட்டத்தில் இந்நிறுவனம் மூத்த குடிமக்கள் மத்தியில் ஆற்றிய அ்ளப்பறிய செயல்பாடுகளின் பங்களிப்புக்காக ‘UN Population Award 2020’ என்ற விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட ஒரே இந்திய நிறுவனம் ஹெல்ப்ஏஜ் இந்தியா நிறுவனமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.