சாலமோன் நினைவு அறக்கட்டளை சார்பில் கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்வு
சென்னை : ஏப்ரல்,22,2020:
சாலமோன் நினைவு அறக்கட்டளை சார்பில் கொரோனா தொற்று பரவலின் தாக்கம் குறித்தும், முகக்கவசம் அணிவதன் அவசியம் மற்றும் சமூக இடைவெளிகளை கடைபிடித்தல் உள்ளிட்டவைகள் குறித்தும் அறக்கட்டளையின் நிர்வாகி மேத்யூ அவர்களால் பொம்மலாட்டம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு
ஓட்டேரியை அடுத்த கொசப்பேட்டை மார்க்கெட் மற்றும் மங்களபுரம் பகுதிகளில் புளியந்தோப்பு சரக காவல் உதவி ஆணையர் ஜெயசிங் அவர்கள் மற்றும் P-2 ஓட்டேரி காவல் ஆய்வாளர் வள்ளி ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்றது
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் நிர்வாகிகளான டேவிட், கிங்ஸ்டன், சாரா, மைக்கேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் கடந்த 15 ஆம் தேதி வில்லிவாக்கம் காவல்துறை சார்பில் கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.