சைதாப்பேட்டை:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும் மத்தியில் ஆளும் சர்வாதிகார பா. ஜ. க ஆட்சியை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.
மேலும் இந்த போராட்டத்தில் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர்களான கே. வீ. தங்கபாலு ஈ. வி.கே.எஸ். இளங்கோவன், எஸ். சி. பிரிவு மாநிலத் தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் மற்றும் மாவட்ட லைவர்களான முத்தலகன், நாஞ்சில் சம்பத், சிவ ராஜசேகரன், எம். எஸ். திரவியம், டில்லி பாபு, அடையாறு துரை ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
மேலும் இந்த போராட்டத்தில் கலை பிரிவைச் சேர்ந்த நிர்வாகிகளான தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலச் செயலாளர்கள் சுரேஷ்பாபு, சேத்துபட்டு ராஜா, வாசு, தமிழ்நாடு காங்கிரஸ் கலைப்பிரிவு தலைவர் கே. சந்திரசேகரன், சூளை ராஜேந்திரன், கே.எம்.கார்டன் நித்தியானந்தம், மத்திய சென்னை மேற்கு மாவட்ட கலைப் பிரிவு தலைவர் பா.சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.