சென்னை சூளையில் உள்ள மிகவும் பழமையான பள்ளியான விஸ்வபாரதி நடுநிலைப்பள்ளியில் பொங்கல் விழா நிகழ்வு பள்ளி தாளாளர் வழக்கறிஞர் கே.பி.சந்திரசேகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அவர்களின் துனைவியார் சாந்தி சேகர்பாபு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சிறப்பித்தார்.


மேலும் இந்நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பேச்சுப்போட்டி, நடனப்போட்டி, விளையாட்டு போட்டி உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்த பொங்கல் விழாவில் பள்ளி தாளாளர் அம்பிகா, தலைமை ஆசிரியர் பியூலா கலைச்செல்வன், மாவட்ட கல்வி அலுவலர் புனிதவள்ளி, சூளை பொதுநல மன்ற தலைவர் சூளை ராஜேந்திரன், கே. எம். கார்டன் நித்தியானந்தம்,ஜி.பிரபு, பூஜா பிரபு,பா.சந்திரசேகர், ஆரணி சீனிவாசன், சூளை குப்புசாமி, கே. வி. கோபிநாத், அப்ரோசல், சிவா மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் திறளாக கலந்து கொண்டனர்.
