ஸ்டெல்லா மாடுடினா காலேஜ் ஆஃப் எஜுகேஷன்
பெண்கள் செல் அமைப்பு லயன்ஸ் இரத்த வங்கியுடன் இணைந்து மாபெரும் இரத்த தான முகாம்!

சென்னை:
ஸ்டெல்லா மாடுடினா காலேஜ் ஆஃப் எஜுகேஷன்
பெண்கள் செல் அமைப்பு மற்றும் மெட்ராஸ் எழும்பூர் லயன்ஸ் இரத்த வங்கி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் மாபெரும் இரத்த தான முகாம்
கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் மெட்ராஸ் எழும்பூர் லயன்ஸ் இரத்த வங்கி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையின் மருத்துவ குழுவைச் சேர்ந்த நிர்வாகி கே.டி.சந்தோஷ்குமார் அவர்கள்
அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு இரத்ததான முகாமை துவக்கி வைத்தார்.

மேலும் இந் நிகழ்வில் செயலாளர் பவுலின் மேரி,
முதல்வர் ஜோசப் கேத்தரின்,
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களான
கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி டீன் முனைவர். ஏ. அல்மா ஜூலியட் பமீலா, மாணவர் விவகாரங்களின் டீன் முனைவர். ஜெயின் சாந்தினி,
அமைப்புச் செயலாளர் முனைவர் சி.பாக்யலட்சுமி,
இணை அமைப்புச் செயலாளர்களான முனைவர் பி. அன்னபூரணி, முனைவர் வி. ஷீஜா வயோலா, டாஃபினி பிங்கி,மாணவர் பிரதிநிதிகளான
கே.யுவஸ்ரீ மற்றும் எஸ். ஆர்த்தி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
