சென்னை: LGBTIQA+ மக்களுக்காக பணிபுரியும் சகோதரன் அமைப்பு, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் (TANSACS) நிதி உதவியுடன் HIV , AIDS குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை, எழும்பூர் அல்சா மாலில் நடைப்பெற்றது.

இந்நிகழ்வினை TI TANSACS துணை இயக்குனர் மருத்துவர் ஜானகிராம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு துவக்கி வைத்தார்.
மேலும் இநநிகழ்வில் சகோதரன் அமைப்பின் பொது மேலாளர் ஜெயா அவர்கள் இது குறித்து கூறியதாவது, தற்போது மேட்டுக்குடி இளைஞர்களிடையே HIV, AIDS, STI பற்றிய போதுமான விழிப்புணர்வு குறைந்து வருகிறது. அதனால் ஆணுறை அவசியம் குறித்த விழிப்புணர்வினை திருநங்கைகள் நடனங்கள் வாயிலாகவும் பதாகைகள் வாயிலாகவும் மேட்டுக்குடி இளைஞர்களுக்கு எடுத்துக்கூறி வருகின்றோம்.இதற்கு நிதி உதவி செய்து வருகின்ற TANSACS விற்கும் நன்றியினையும் தெரிவித்துக்கொண்டார் .


சகோதரன் TANSACS -TI திட்டத்தின் திட்டமேலாளர் ஆனந்த் கூறும்போது, சகோதரன் அமைப்பு கடந்த 20 வருடங்களுக்கு மேலாக HIV தடுப்பு பணியில் செயல்பட்டு வருகிறது. தற்போது இணைய செயலிகள் மூலம் பெரும்பாலான இளைஞர்கள் உடலுறவு துணைவர்களை தேர்ந்தெடுக்கின்றனர். அவ்வாறானவர்கள் இந்நிகழ்ச்சியை பார்க்கும்போது கண்டிப்பாக விழிப்புணர்வு வரும் என்பது எங்களின் முழு நம்பிக்கை.