ஆழ்வார்பேட்டை : அக், 31
சென்னை அண்ணாநகர் சைக்கிள்ஸ் என்கிற பிரமாண்ட ஷோரூம் 6-வது கிளை திறப்பு விழா ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையிலுள்ள் நாரத கானா சபா எதிரில் நடைப்பெற்றது.

இதில் தமிழ் திரைப்பட நடிகரும், தி.மு.க.இளையஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு அண்ணா நகர் சைக்கிள்ஸின் 6வது புதிய கிளையை திறந்து வைத்தார்.

மேலும் செய்தியாளர்களிடம் பேசிய முதன்மை செயல் அதிகாரி சுதாகர் அவர்கள் கூறியதாவது:
முதன் முதலில் கடந்த வருடம் சென்னை அண்ணாநகரில் துவங்கப்பட்ட அண்ணாநகர் சைக்கிள்ஸ் மல்டி பிராண்டு ஷோரூம் திறக்கப் பட்டது .மேலும் இதன் கிளைகள் வேலூர் ,சோளிங்கர்,சித்தூர், கீழ்பாக்கம் ஆகிய முக்கிய பகுதிகளில் துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது இன்று ஆழ்வார்பேட்டை, டி.டி.கே சாலை,நாரத கானா சபா எதிரில் 6_வது கிளை புதிய ஷோரூம் தொடங்கப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்தார் .

மேலும் இந்நிகழ்வில் தமிழ் திரைப்பட குணசித்திர நடிகர் சதீஷ் அவர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்.

மேலும் இந்நிகழ்வில் சுதாகர் அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்டோர் திறளாக கலந்துக் கொண்டனர்.

(எஸ்.ஏ.ராஜ்குமார் -செய்தியாளர்)
96 77 34 91 96