ஈரோடு: சிவகாசி பிரைட் விஷன் சாரிட்டபின் டிரஸ்ட்,சிவகாசி பட்டாஸ்நகர் அரிமா சங்கம் மற்றும் சென்னிமலை அரிமா சங்கமும் இணைந்து 1264 வது கண்தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் பற்றிய சிறப்பு கருத்தரங்கம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை, ஹிந்துஸ்தான் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியின் இளஞ் செஞ்சிலுவை சங்கம் சார்பாக கல்லூரி அரங்கில் சிறப்புற நடைப்பெற்றது.

இந்த கண்தான விழிப்புணர்வு கருத்தரங்கில் கல்லூரியின் முதல்வர் முனைவர். ராமன் அவர்கள் தலைமை தாங்கினார்.

இக்கல்லூரியின் பேராசிரியரும், இளஞ் செஞ்சிலுவை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் பூங்கொடி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

இந்த நிகழ்வில் அரிமா மாவட்டத்தின் முன்னாள் மாவட்ட ஆளுநர் அரிமா.சுப்ரமணியன் சென்னிமலை சங்க கண்ணொளி திட்ட ஒருங்கிணைப்பாளர் அரிமா.ஈஸ்வரன் அரிமா சங்கத்தின் தலைவர் அரிமா.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிவகாசி பிரைட் விஷன் சாரிட்டபிள் டிரஸ்ட்டின் நிறுவனத்தலைவரும், சிவகாசி பட்டாஸ் நகர் அரிமா சங்க பட்டயத்தலைவரும், கண்தான மாவட்டத் தலைவர் மற்றும் உலக சாதனையாளருமான அரிமா டாக்டர் ஜெ.கணேஷ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்தானம் மற்றும் உடல் உறுப்பு தானத்தின் அவசியம் மற்றும் நன்மைகள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.

கண்தானம் பற்றிய குறும்படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

அரிமா டாக்டர் ஜெ.கணேஷ் அவர்கள் கூறுகையில், அகத்துக்கு அழகு அளிப்பவை மட்டுமல்ல கண்கள் உலகத்தை நாம் காண உதவும் அற்புத உறுப்பு. கண்கள் இல்லாத வாழ்க்கை ஓர் இருண்ட உலகம் இத்தகைய இருண்ட உலகில் வாழ்பவர்களுக்கு ஒளி விளக்காக கிடைத்ததுதான் கண்தானம். மனிதர்களுக்கு மரணம் உண்டு. ஆனால் கண்களுக்கு மரணம் இல்லை. எனவே மரணத்திற்கு பின் அனைவரும் கண்தானம் செய்யலாம். சமுதாயத்தில் தொடர்ந்து விழிப்புணர்வை அதிகரிப்பதின் மூலம் இத்தகைய கண்தான சேவையை பன்மடங்கு உயர்த்த முடியும் என்றார். ஒருவர் கண்தானம் வழங்கிளால் நான்கு நபர்கள் பார்வை பெற முடியும் என்றும் கூறினார். கண்தானத்திற்கு பதிந்து வைக்க தேவையில்லை என்றும், உறவினர்கள் சம்மதம் இருந்தால் கண்தானம் வழங்கலாம். கண்தானம் பெறுவதில், தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும், உடல் உறுப்பு தானத்தில் முதலிடத்திலும் உள்ளது. இதற்கு மாணவ – மாணவிகளின் பங்கு அதிகமாக உள்ளது என்றும் கூறினார்.

மேலும் உடல் உறுப்பு தானம் பற்றி அவர் பேசுகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் சாலை விபத்துக்களால் இறக்கின்றனர். அவர்களின் உறுப்புகள் வெவ்வேறு நபர்களுக்கு உயிர் கொடுக்கின்றன.

சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல், குடல் போன்ற உறுப்புக்களை நாம் உயிருடன் இருக்கும் போதே தானம் செய்யலாம். பெரும்பாலனவை 6 முதல் 72 மணி நேரத்திற்குள் இடமாற்றம் செய்யப்படுகின்றன. ஒரு நன்கொடையாளர் குறைந்தது. எட்டு பேரின் உயிரைக் காப்பாற்ற முடியும்.

உடல் உறுப்பு தானம் என்பது மனிதர்களிடமிருந்து ஆரோக்கியமான திசுக்கள் மற்றும் உறுப்புகள் பிரித்தெடுக்கப்படும் ஒரு செயல்முறையாகும். பின்னர் இந்த உறுப்புகள் நன்
கொடையாளர் உயிருடன் இருக்கும் போது அல்லது நன்கொடையாளரின் குடும்பத்தின் அனுமதியுடன் இறந்த நிலையில், சட்டபூர்வமாக மற்றொரு தேவையுள்ள நபருக்கு மாற்றப்படும். உடல் உறுப்புதானம் மூலம் மற்றொருவரின் உயிரைக் காப்பாற்ற முடியும்.

உடல் உறுப்பு
தானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதைச் செய்ய மக்களை ஊக்குவிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13ம் தேதி உலக உறுப்புதான தினம் அனுசரிக்கப்படுகிறது. கண்தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்த ஹிந்துஸ்தான் அறிவியல் மற்றும்
வணிகவியல் கல்லூரியின் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இம்முகாமில் பங்கு பெற்ற மாணவிகளுக்கு நோட்டீஸ்களும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இந்த விழிப்புணர்வு கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை ஹிந்துஸ்தான் அறிவியல் மற்றும் வணிகளியல் கல்லூரியின் மாணவ
மாணவிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

இறுதியில் இக்கல்லூரியின் துணை பேராசிரியர் உதயகுமார் அவர்கள் நன்றியுரை நல்கினார்.