சென்னை:தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கம்
திருவள்ளூர் மாவட்டம் சார்பில் விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் சேப்பாக்கம் நிருபர்கள் சங்க கூட்ட அரங்கில் திருவள்ளூர் மாவட்டத்தலைவர்
கே.வாசுதேவன் அவர்கள் தலைமையில் சிறப்புற நடைப்பெற்றது.

தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கம்(TNCPRPM) நிறுவனத் தலைவர் முனைவர் என். புண்ணிய மூர்த்தி அவர்கள் முன்னிலை வகித்தார்.

இந்த நிகழ்வில்
பாதிக்கப்பட்டோர் கழகத்தின் மாநில தலைவர் இரா.கணேசன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சிறப்பித்தார்.

TNCPRPM இணை செயலாளர் முனைவர் பி. விஜயன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

மேலும் இந்த கூட்டத்தில் தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கம் (TNCPRPM) நிர்வாகிகளான செயலாளர் டி.பி.புகழ்அழகி ,
துணைத்தலைவர்களான முனைவர் பி. பால்ராசு, ஜி. நரசிம்மன், திருவள்ளூர் மாவட்ட துணைத்தலைவர் எல்.செந்தில் வேல், முதன்மை மக்கள் தொடர்பு அலுவலர் முனைவர் எஸ். கார்த்திகேயன்,மாநில ஆலோசகர் எம்.ஏ.காளீஸ்ராஜ்,
மகளிர் அணி தலைவி பி. அம்மனி,விழிப்புணர்வு கூட்ட ஒருங்கிணைப்பாளர் எம். லோகநாதன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

இந்நிகழ்வின் இறுதியாக கே. மாரிசாமி அவர்கள் நன்றியுரை நல்கினார்.