மதுரை :அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின் சார்பில் மதுரை தெற்கு மண்டல மாநாடு மற்றும் சேவை ரத்னா விருது வழங்கும் விழா நிகழ்வு மதுரை மதுரை தமிழ்நாடு ஹோட்டலில்
இந்த கூட்டமைப்பின் தலைவர் வழக்கறிஞர் முனைவர்
டி.கே.சத்தியசீலன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் மற்றும் நீதியரசர் டி. ஜெயசந்திரன், முன்னாள் மாவட்ட நீதிபதி ஜான் ஆர்.டி.சந்தோசம்ச ,முன்னாள் ஆந்திர மாவட்ட நீதிபதி ஜே. ஹரிதாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்வில் அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின் மாநில செயலாளர் பி. மனோகரன் வரவேற்புரை ஆற்றினார்.

மேலும் இதில் அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின் நிர்வாகிகளான ஹெனிஃபா, பி. தமிழரசி, ஆர்.முருகவேலு,
ஆர்.நடராஜன்,ஜி. கிருஷ்ணன், ஜமுனா ஆகியோர் துவக்கவுரை ஆற்றினர்.

அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின் நிர்வாகி கரூர் சதீஷ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

மேலும் இந் நிகழ்வில் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வழக்கறிஞர்கள் மற்றும் சமூக சேவையாளர்களுக்கு சேவை ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும் இதில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், மதுரை, வேலூர், ஆம்பூர் மாவட்ட வழக்கறிஞர்கள், சமூக சேவையாளர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் திறளாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.