திருவொற்றியூர் : மே,09

கொரோனா பெரும் தொற்றால் 144 ஊரடங்கு பொது முடக்கத்தால் ஏழை, எளிய மற்றும் பல தரப்பட்ட மக்கள் பாதிப்பு குள்ளாகி வாழ்வாதாரமின்றியும், பொருளாதார நெருக்கடியிலும் தவித்து வருகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.குப்பன் , தொழிலதிபர் கே.கார்த்திக் ஆகியோர் சமூக நோக்குடன் சென்னை திருவொற்றியூர் 6 வது வட்டத்தில் உள்ள மதுரா நகர் , சரஸ்வதி நகர், அண்ணாமலை நகர் பொன்னியம்மன் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள மூத்த குடிமக்கள், வாழ்வாதாரம் இழந்து வசித்து(தவித்து)வரும் சுமார் 600 க்கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பகளுக்கு 3 கிலோ அரிசி , பிரட்,பருப்பு,காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய மளிகை பொருட்களை வழங்கினர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் கவின்சிலரும், திருவொற்றியூர் தொகுதி கழக இணைச் செயலாருமான இ.வேலாயுதம் அவர்கள் சிறப்பாக செய்திருந்தார். புகழேந்தி உள்பட அதிமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

மேலும் இந்நிகழ்வில் நிவாரண பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, முககவசம் அணிந்து அமைதியான முறையில் வரிசையில் நின்று வாங்கி சென்றனர்.