விருகம்பாக்கம் :
அதிரடி குரல் மாத இதழ் மற்றும் அதிரடி குரல் அறக்கட்டளை சார்பில் கொரோனா ஊரடங்கு கால கட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு மற்றும் அரிசி உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக 100-வது வார அன்னதான நிகழ்ச்சி விருகம்பாக்கம்,ரெட்டி தெருவில் அதிரடி குரல் அறக்கட்ட்ளையின் நிறுவனர் வி.என்.ஜெயகாந்த் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் இந்திய குடியரசு கட்சியின் தலைவர் சே.கு.தமிழரசன், அ.இ.அ.தி.மு.க விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் விருகை ரவி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு பொதுமக்களுக்கு அறுசுவை உணவுகளை வழங்கினர்.
மேலும் இந்நிகழ்வில் நான்காம் தூண் பத்திரிக்கையாள்ர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராபர்ட் ராஜ், ஊடக உரிமைகுரல் பத்திரிக்கையாளர் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச்செயலாளர் தமிழன் வடிவேல், ரிப்போர்ட்டர் ப்ளாஷ் தமிழ் மாத இதழின் ஆசிரியர் பாலாஜி, பகுஜன் குரல் ஆசிரியர் ஜெகதீஷ், தொட்டில் செய்தி ஆசிரியர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் நிகழ்ச்சியில் அதிரடி குரல் மாத இதழ் நிருபர்கள், அதிரடி குரல் அறக்கட்டளையின் நிர்வாகிகள், அதிரடி குரல் தொழிலாளர் நலச்சங்கத்தின் தொழிலாளர்கள், நண்பர்கள், பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் திறளாக கலந்து கொண்டனர்.
இறுதியில் அதிரடி குரல் தொழிலாளர் நலச்சங்கத்தின் தொழிலாளர்களுக்கு அரிசி தொகுப்பு மற்றும் ஹாட்பேக் வழங்கப்பட்டது.