நான் நெகிழ்ந்த மகிழ்ச்சி தருணம்:

வாழ்க்கையில் எத்தனை சுவாரசியமான நிகழ்வுகள் நடந்தாலும் எல்லோருடைய வாழ்க்கையிலும் இப்படி ஒரு எதிர்பார்க்காத நிகழ்வு நடைபெறும் அப்படிப்பட்ட ஒரு சுவாரசியமான நிகழ்வு தான் என் வாழ்க்கையிலும் ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீ பெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட பட்டியலின கிராமமான கண்ணந்தாங்கல் (கண்ணன் தாங்கல்) கிராமத்தின் கோயில் திருவிழாவிற்கு தலைமை தாங்க சென்றிருந்தேன். அப்போது கோவிலில் சென்று கடவுளை வணங்கி விட்டு மீண்டும் அங்கிருந்து புறப்படுகின்ற தருணத்தில் என்னை நோக்கி பலர் ஓடி வந்தார்கள்.

எனக்கோ ஏதோ ஒரு புதுவிதமான வியப்பாக இருந்தது. ஏதோ பொருளை வாங்க வேண்டும் என்று தான் கேட்கிறார்கள் என்று நினைத்தேன் திடீரென்று அங்கிருந்த ஒரு பட்டியலின பெண் உங்களை நான் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா என்று ஆசையோடு கேட்டார்.அதற்கு நானும் தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்றேன். அந்த தருணத்தில் அந்த பெண்ணின் முகத்தில் அப்படி ஒரு பேரானந்தத்தை பார்த்து பூரித்து போனேன்.


அது மட்டும் இல்லாமல் அங்கு இருந்த சுமார் 50க்கும் மேற்பட்ட பட்டியலின மக்களும் ஒன்று சேர்ந்து என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். என் வாழ்க்கையில் நான் பல தலைவர்களுடனும்,பல சினிமா பிரபலங்களுடனும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை விட இவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் என் வாழ்க்கையில் ஒரு புதுவித அனுபவத்தை தந்தது.

அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இந்த புகைப்படத்தை பகிர்கிறேன்
(நடிகர் மற்றும் சமூக ஆர்வலர் -பிரவீன் குமார்)