ஆம் ஆத்மி கட்சி(தமிழ்நாடு) மாநில தலைவர் வசீகரன் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் திடீர் சந்திப்பு!
சென்னை :நடைபெற இருக்கின்ற 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும்,திராவிட முன்னேற்ற கழக தலைவர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்களை ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் வசீகரன் அவர்கள் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது ஸஆம் ஆத்மி கட்சியின் மாநில மகளிர் அணி செயலாளர் ஸ்டெல்லா மேரி, வடசென்னை மாவட்ட தலைவர் பாரூக் தென்சென்னை மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.