சென்னை:
தென்னிந்திய பெண்கள் சமுதாய முன்னேற்ற சங்கம் மற்றும் GVN Home’s ராஜா குமார் அவர்களும் இணைந்து
சர்வதேச மகளிர் தினவிழா, உலக நுகர்வோர் உரிமைகள் தினவிழா,
தேசிய உச்ச தியாக தினவிழா,உலக சமூகப்பணி தினவிழா மற்றும் சாதனையாளர் விருது வழங்கும் விழா ஆகிய ஐம்பெரும் விழா சென்னை அண்ணாநகர் பகுதியில் இதன் நிறுவனர் மற்றும் மாதர் சங்க தலைவி
முனைவர் வி. விஜயலட்சுமி அவர்கள் தலைமையில் சிறப்புற நடைப்பெற்றது.

இந்நிகழ்வில்
தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர்
நீதியரசர் துரை. ஜெயச்சந்திரன்
மற்றும் நுகர்வோர் அமைப்பின் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் முனைவர் கே. கே. சொக்கலிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினர்.

மேலும்
இந்நிகழ்வில் யுனிவர்சல் அச்சீவர்ஸ் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நிறுவனத்தலைவர் முனைவர்
பாபு பாலகிருஷ்ணன்,
மக்கள் உரிமை பாதுகாப்பு கழகத்தின் தலைவர் முனைவர் பி. பாலசுப்பிரமணியன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்பு பிரிவு சென்னை பெருநகர காவல் ஆய்வாளர் எஸ். மகாலெட்சுமி, கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் எ. வகிதாபேகம் மற்றும் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்வின் தொடக்கமாக
ஐம்பெரும் விழாவில் ஐந்து பெண்களால் குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தர்கள் மற்றும் கந்தர்வா கலா பூஷன் எஸ். சந்தோசினி மற்றும் நவரச நாட்டியாலயா சந்தியா, கனிஷ்கா, சாஷினி, கந்ஸ்ஹில்கஸ்ரீ அவர்களின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைப்பெற்றது.

மேலும் இந்நிகழ்வில் முனைவர் விஜயலட்சுமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டியும், தலை கீரிடம் சூட்டியும்,ஆளுயர மாலை அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும், நினைவு பரிசு வழங்கியும் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் இணைந்து வாழ்த்துதல்களை தெரிவித்து க் கொண்டனர் .

மேலும் இதில் சமையல் கலையில் கைதேர்ந்த 60 பெண்களுக்கு கிச்சன் குயின்ஸ் விருதும், பல்வேறு துறைகளில் சாதனை புரிந்துவர்களுக்கு சிறந்த சேவையாளர் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வினை திவ்யா ஸ்ரீதரன் அவர்கள் சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

இந்த ஜம்பெரும் விழாவில் தென்னிந்திய பெண்கள் சமுதாய முன்னேற்ற சங்கத்தின் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளான
எம். பானுமதி
ஜே. நிர்மலா
அலமேலு
கலைச்செல்வி
கே. சாந்தி
எ. மஞ்சுளா
சி. சித்ராதேவி
ஷோபா
தேவி
உள்ளிட்டோர் திறளாக கலந்துக் கொண்டனர்.