நீலாங்கரை:விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இளைய தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை நீலாங்கரையில் நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் புஸ்ஸி ஆனந்த் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.
ஈ.சி.ஆர் சரவணன் அவர்கள் இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்.

மேலும் இந்நிகழ்வில் விழுப்புரத்தை சேர்ந்த
வீரஜெயந்தன் மற்றும் அவரது சகோதரர் கிரிஷ் ஜெய் ஆகியோர் 1000 கன சதுரத்தை பயன்படுத்தி 6.5 உயரம் மற்றும் 5.5 அகலம் கொண்ட விஜய் அவர்களின் முக உருவ படத்தை வரைந்து உலக சாதனை படைத்து அங்கீகார சான்றிதழ் பெற்று அசத்தினர்.

இவரின் இந்த சாதனைக்கு தமிழ்நாடு கன சதுர சங்கத்தின் முதன்மை பயிற்சியாளர்
ஆனந்த் ராஜேந்திரன் அவர்கள் சிறப்பான முறையில் ஊக்கப்படுத்தியும், பயிற்சி அளித்தும் உலக சாதனையாளராக மாற்றிய பெருமைக்குரியவர்.

மேலும் இந்த மாணவர்களின் சாதனை நிகழ்விற்கு இவர்களின் பெற்றோர்கள் உற்ற துணையாக இருந்து வருகின்றனர்.