சூளை: அக், 20
எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 58 வது வார்டில் (சூளை ஏ.பி.ரோடு)எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். ரவிச்சந்திரன் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து(1கோடியே 12லட்சம்) ராகவேந்திரா மூலிகை மற்றும் பொழுதுபோக்கு பூங்கா திறப்பு விழா நடைப்பெற்றது.இந்நிகழ்வில மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மூலிகை பூங்காவை திறந்து வைத்தார்.இதில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும்,துறைமுகம் சட்டமன்ற உறுப்பினருமான பி.கே. சேகர்பாபு அவர்கள் கலந்து க் கொண்டு சிறப்பித்தார்.இந்த பூங்காவின் சிறப்பம்சமாக அகத்திய முனிவர் தவம் இருக்கும் காட்சியுடன் 108 மூலிகைச் செடிகள் மற்றும் 27 நட்சத்திர செடிகள் அசத்தலாக கலைநயத்துடன் அமைந்துள்ளது சிறப்பம்சமாகும்.மேலும் இந்தப் பூங்காவின் உள்ளே இறகுபந்து விளையாட்டு திடலும் அமைந்துள்ளது. இந்த பூங்கா வெளிநாட்டிற்கு இணையாக கலைநயத்துடன் வடிவமைத்தது ஜே.கே. கண்ஸ்ட்ரக்ஸன் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.