சமூக சேவா சங்கம் சார்பில் 78வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்!

சென்னை:சமூக சேவா சங்கம் சார்பில் 78வதுஇந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு இச்சங்கத்தின் செயலாளர் அந்தோனி யேசு அவர்கள் ஏற்பாட்டிலும், தலைவர் முனுசாமி ஆகியோர் முன்னிலையிலும் அயனாவரம் பொன்வேல்புரம், பனந்தோப்பு ரயில்வே காலனி பகுதியில் சுதந்திர தின விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிக்கையாளர் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் சிறப்பு பொறியாளர் டாக்டர் பி.ஜெ செங்கை சத்யா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.

மேலும் கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.