இரயில்வே துறை பொது பெட்டிகளை அதிகரித்தால் பொதுமக்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கலாம்:
பாக்யராஜ் வெள்ளைச்சாமி கோரிக்கை!

தஞ்சாவூர்:
மத்திய அரசு கட்டுப்பாட்டில் தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்து இரயில்களில் பல இரயில் பாதைகள் சீரமைப்பு காரணமாக பல இரயில்களின் சேவைகள் நிறுத்தி வைத்துள்ளார்கள் ஒரு சில இரயில்களை மட்டும் தான் இயங்கி வருகிறது இரயில்வே துறை இதனால் தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் இரயில்களின் பொது பெட்டியில் பயணம் செய்யும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளார்கள் எனவே தென்மாவட்டங்களில் இருந்து சென்னை எழும்பூர் வரை இயங்கும் வழி தடங்களில் மதுரையில் 1 பெட்டியும் திருச்சிராப்பள்ளியில் 1 பெட்டி என்று இரண்டு இடங்களிலும் இணைப்பு செய்து பொது சேவை பெட்டிகள் 2 பெட்டி கொண்டு கூடுதலாக இணைத்து இயக்கினால் பொதுமக்களும் கூட்ட நெரிசலை சமாளித்து சென்னை எழும்பூர் வரை பொதுமக்கள் இணைப்பு பெட்டியை பயன்படுத்தி பயணிக்கும் விதமாக அமையும் என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் தமிழ்நாடு இரயில்வே துறை அதிகாரிகளுக்கும் கோரிக்கையாக வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் எனவும்,
உடனடியாக இதை அமல்படுத்தி இணைப்பையும் ஏற்படுத்தி தருமாறு பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என இயற்கை ஆர்வலரும், பெருந்தலைவர் நாம் மனிதர் கழகத்தின் நிறுவன தலைவருமான
பாக்யராஜ் வெள்ளைச்சாமி அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்தார்.

Details